வழக்கத்தைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை மளமளவென பெருகிவருகிறது. இதற்கு காரணம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு என்ற சட்டத்தை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நிறைவேற்றியதுதான்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5% இட ஒதுக்கீடு. அழுத்திச் சொல்லும் எடப்பாடியார்.

இந்த நிலையில், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் இந்த 7.5% இட ஒதுக்கீட்டில் இடமளிக்க வேண்டுமென பல்வேறு பள்ளிகள் கோரிக்கை விடுத்துவந்தன.
இதுகுறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே. அரசு உதவிபெறும் பள்ளிகள் என்றாலும் அவை தனியார் பள்ளிகளே” என்று உறுதியுடன் பதிலளித்து இருக்கிறார்.
ஆக, அரசு பள்ளி மாணவர்களுக்கு நல்ல யோகம்தான்.