60 வயது நபரை கத்தியால் குத்திக் கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிப் புதைத்த 30 வயதுப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
60 வயது கிழத்தை கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக்கிய 30 வயது பெண்! பதற வைக்கும் காரணம்!

டெல்லியின் ஸ்வரூப் நகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் வீட்டுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வாடகை வசூலிக்கச் சென்ற வீட்டு உரிமையாளர் வீட்டில் இருந்த 60 வயது நபரைக் காணவில்லையே எனக் கேட்டதாகவும் அதற்கு அந்தப் பெண் அவர் வெளியூருக்கு சென்றிருப்பதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும் அவருக்கு வீட்டில் இருந்த சூழ்நிலைகள் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் தெரிவித்ததார். காவல்துறை விசாரணையில் முதலில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அந்தப் பெண் பின்னர் தான் தான் அவரைக் குத்திக் கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டுக்கு முன் இருந்த காலி இடத்தில் புதைத்ததை ஒப்புக்கொண்டார்.
காவல் துறை விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகின. கொல்லப்பட்ட நபர் கொன்ற பெண்ணின் தாயுடன் வசித்ததாகவும், தாய் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்குச் சென்றதைத் தொடர்ந்து மகளுடன் கடந்த 8 ஆண்டுகளா அவர் வசிக்கத் தொடங்கியதாக போலீசார் தெரிவித்தனர். இதில் அவர்களுக்கு 7 வயது மகன் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்
இந்நிலையில் 60 வயது நபர் இருவரையும் கொடுமைப்படுத்தியதாகவும் குடித்து விட்டு வந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று அந்த நபர் குடித்துவிட்டு வந்து தாக்கியதால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் கத்தியால் அவரை குத்தியதாகவும், உடலை சிறு துண்டுகளாக வேட்டி புதைத்ததாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.