நீச்சல் குளத்தில் திடீரென வந்த சுனாமி! அலறிய மக்கள்! 44 பேரை தூக்கி வீசிய அலை! பரபரப்பு சம்பவம்!

சீனாவில் உள்ள ஒரு பிரபலமான பொழுதுபோக்கு பூங்காவில் செயற்கை அலையை உருவாக்கும் இயந்திரம் பழுதடைந்ததால் ஏற்பட்ட விபத்து காரணமாக 44 பேர் நீச்சல் குளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .இதனால் தற்காலிகமாக அந்த பூங்காவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.


சீனாவில் shuiyun என்ற பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது இதில் ஏராளமான மக்கள் தங்களது விடுமுறையை கழிக்க வந்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். இதையடுத்து இந்த பூங்காவில் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர் வரை அனைவரும் விளையாடும் இடத்தில் தண்ணீர் விளையாட்டுகள் மற்றும் இதர விளையாட்டுக்களும் உள்ளது. இந்த பூங்காவில் எப்பொழுதுமே மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

இந்நிலையில் செயற்கையாக அலையை உண்டுபண்ணும் நீச்சல்குளத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் குளித்து வந்துள்ளனர். இந்நிலையில் அனைவரும் அலாரம் அடித்து உடனேயே எல்லோரும் அதற்காக ஆயத்தமாக காத்துக் கொண்டிருந்த நிலையில் செயற்கையாக ஏற்படுத்தும் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக  அலை வேகமாக வர ஆரம்பித்தது.

இதையடுத்து சிறிது நேரம் செல்லச்செல்ல அலையின் அளவு அதிகமானதால் சுனாமிபோல் நீச்சல் குளத்திலிருந்து அவர்கள் அனைவரையும் தூக்கி வெளியே வீசியது இந்நிலையில் சுமார் 44 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் செயற்கையாக அலையை ஏற்படுத்தும் இயந்திரத்தை சரியாக இயங்காததால் தான் இந்த தவறு நிகழ்ந்துள்ளது. என முதலில் ஊழியர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். பின்னர் ஆராய்ந்து பார்த்தபோது அவர் மீது எந்த ஒரு தவறும் இல்லை எனவும் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் தற்காலிமாக அந்த பூங்காவை மூடவும் உத்தரவிட்டுள்ளனர்.