12 வயசு வித்தியாசம்..! ஆனால் அந்த ஹீரோ தான்..! 30 வயது நடிகையின் ஓல்ட் ஒயின் டேஸ்ட்! கோடம்பாக்கம் கிசுகிசு!

சுத்தமான தமிழச்சி நடிகை ஒருவர் தற்போது புகழின் உச்சத்தில் இருக்கும் நிலையில் தன்னை விட 12 வயது மூத்த நடிகருடன் கசமுசாவில் சிக்கியிருப்பது தான் கோடம்பாக்கத்தில் தற்போது கொத்து புரோட்டாவாகிக் கொண்டிருக்கிறது.


நம்ம நாயகி திரைத்துறைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. முதல் இரண்டு வருடங்கள் நாயகியாகவும் பிறகு கதாநாயகியாகவும் திறமை காட்டிய நிலையில் பெரிதாக எதுவும் எடுபடவில்லை. இந்த நிலையில் தான் நம்ம நாயகன் கண்ணில் நாயகி பட, ஒரே படத்தில் ஓஹோவென உயர்ந்துவிட்டார். 

படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் அந்த படத்தில் வரும் அந்த ஒற்றைப் பாடல் நாயகியை யார் இவர் என்று கேட்க வைத்தது. கச்சிதமான உடல், சிரித்த முகம், லைட்டாக கருத்த தேகம் என பழைய சாவித்திரியை நினைவுபடுத்த அந்த மாதிரி பெண்கள் மீது ஆசை கொண்ட நடிகர்கள், இயக்குனர்கள் நடிகையை மொய்க்க ஆரம்பித்தனர்.

நாயகியாக வாய்ப்பு குவிந்து கொண்டிருந்த நிலையில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நம்ம நாயகி நடித்த படம் சக்கை போடு போட்டது. விருதுகளும் குவிய திரையுலகின் முன்னணி மற்றும் முக்கிய நட்சத்திரமானார். வருடத்திற்கு பத்து படங்கள் என பிசியாக இருந்தாலும் நம்ம நாயகன் படம் என்றால் உடனே கால்ஷீட் தான்.

நாயகனுக்கு வயது 40ஐ கடந்து திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார் என்றாலும் கூட அவர் மீது நம்ம நாயகிக்கு கிறக்கம் மட்டும் போகவே இல்லை. நாயகனும் நாயகியின் குறிப்பறிந்து அவ்வப்போது மட்டும் அழைத்து ஆசையை தீர்த்து அனுப்புவார் என்று கூறிச் சிரிக்கிறார்கள் தோழிகள். என்னடி உனக்கு இப்படி ஒரு டேஸ்ட் என்று தோழிகள் கேட்க, பழைய ஒயின் தான் ருசி என்று கூறி கண்சிமிட்டுகிறாராம் நம்ம நாயகி.