29 வயது நபருக்கு மனைவியான 17 வயது இளம் பெண்! கண்டுபிடித்து பிரித்த உறவுகள்! பிறகு அரங்கேறிய விபரீதம்! நாகர்கோவில் பரபரப்பு!

நாகர்கோவில் திருமணமான சில நாட்களில் காதல் மனைவியை பிரிந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நாகர்கோவிலை சேர்ந்த குரு நாதன் மகன் மணிகண்டன்(வயது 29) அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார், பெற்றோர் எதிர்ப்பையும் தாண்டி இருவரும் காதல்.திருமணம் செய்து கொண்டு தனியாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்,சிறுமியை சட்ட விரோதமாக திருமணம் செய்து கொண்டதாக, போலீசாருக்கு புகார் கொடுக்கபட்டதை அடுத்து போலீசார் சிறுமியை மீட்டு காப்பகத்தில் சேர்த்து உள்ளனர்,

பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்து உள்ளனர். இதனை அடுத்து மீண்டுமாக ஒட்டம் பிடித்த சிறுமி காதலன் மணிகண்டன் உடன் சேர்ந்து வாழ மீண்டுமாக போலீசார் இருவரைய பிரித்து மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

சிறுமி மீண்டுமாக காப்பகத்தில் சேர்க்க பட்டுள்ள நிலையில் பெயிலில் வந்த மணிகண்டன் மிகுந்த மன சோர்வுடன் இருந்துள்ளாதாக தெரிகிறது. இதற்கிடையில் மணிகண்டன் தனது வீட்டில் தூக்கு போட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.