தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
வீடு தேடி வரும் 2,500 ரூபாய் டோக்கன்… மகிழ்ச்சியில் மக்கள்… எடப்பாடியாருக்கு பாராட்டு மழை

கொரோனா அச்சுறுத்தல் உள்ள இந்த காலகட்டத்தில் மக்கள் அதிகமாக ரேஷன் கடைகளில் கூடுவதை தவிர்க்கும் விதமாக, மக்கள் வீடுகளுக்கே சென்று ரூ.2500க்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று முதல் வரும் 31ம் தேதி வரை டோக்கன்கள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும், டோக்கனில் மக்கள் ரேஷன் கடைக்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்வதற்கான தேதி மற்றும் நாள் குறிக்கப்பட்டிருப்பதால் அதிக அளவில் கூட்டம் கூடாமல் மக்கள் குறித்த நேரத்தில் சிரமமின்றி பரிசுத் தொகையை பெற்றுக் கொள்ள முடியும் என்கின்றனர் ரேஷன் கடை பணியாளர்கள்.
வீடு தேடி வரும் பொங்கல் பரிசுக்கு மக்கள் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதிகளவு கூட்டம்கூடாமல் கொரோனா முன்னெச்ரிக்கையோடு கடைபிடிப்பதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளனர். தொந்தரவு இல்லாமல் கையில் டோக்கன் கிடைத்திருப்பதற்கு எடப்பாடியாருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.