தனது ஆண்மையை நிரூபிப்பதற்காக, கண்ணில் சிக்கியவர்களை எல்லாம் பலாத்காரம் செய்துவந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மனைவியிடம் ஆண்மையை நிரூபிக்க 21 பெண்களுடன் பாலியல் வல்லுறவு! போலீசை அதிர வைத்த இளைஞன்!

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மஃபூஸ் செய்க் (21). தானே பகுதியில் உள்ள மிரா ரோடு பகுதியை சேர்ந்த இந்த நபர் மீது, சமீபத்தில் பாலியல் புகார் எழுந்தது. 11 வயது சிறுமி மற்றும் 21 வயது பெண் ஒருவரை இவர் பலாத்காரம் செய்ததாக, போலீசார் வழக்குப் பதிந்தும் விசாரிக்கின்றனர். இதுபற்றிய விசாரணையின்போது, இந்த நபர் கிட்டத்தட்ட 20 சிறுமிகள் மற்றும் ஒரு பெண் ஆகியோரை கடந்து 15 மாதங்களில் பலாத்காரம் செய்ததாக உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். ஏன் இப்படி எல்லாம் ஏன் செய்தாய், என்று போலீசார் கேட்டதற்கு, ''என்னை ஆண்மையற்றவன் எனக் கூறிவிட்டு, என் மனைவி, என்னை பிரிந்து சென்றுவிட்டாள். இதனால், ஏற்பட்ட மன உளைச்சலால், நான் ஆண்மையுடன் இருப்பதை நிரூபிப்பதற்காக, சிறுமிகள் முதல் யார் கண்ணில் பட்டாலும் பலாத்காரம் செய்ய தொடங்கினேன்,'' என சைக்கோத்தனமாக அந்த நபர் போலீசாரிடம் கூறியுள்ளான்.
சினிமா படங்களில் வரும் சைக்கோ குற்றவாளிகள் போல, இந்த நபரின் செயல் உள்ளதாக, போலீசார் கூறுகின்றனர். இந்த குற்றவாளி பலாத்காரம் செய்தவர்களில், 2 பேர் மட்டுமே தைரியமாகப் போலீசில் புகார் கூறியுள்ளனர். எனவே, அதன் பேரில், அவனை கைது செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தப்படுவதாக, போலீசார் தெரிவித்தனர்.