பிரபல நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற திருடர்களை காவலாளி ஒருவர் தடுத்து நிறுத்திய சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தை கத்தையாக பணம்! அட்டிகா நகை கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள்! துப்பாக்கியுடன் காவலாளி செய்த துணிச்சல் செயல்! குவியும் பாராடாடு!

சென்னை கோயம்பேடு பகுதியில் அட்டிகா தங்க நகை கடை இயங்கி வருகிறது. இங்கு பணப்பரிவர்த்தனை அதிகாரியாக கிரிஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்துள்ளார்.
கோயம்பேட்டிலிருந்து பாதுகாவலரான சந்திரகுமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது நெடுந்தொலைவில் இருந்து அவருடைய இரு சக்கர வாகனத்தை சிவப்பு நிற கார் ஒன்று பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. தி.நகரில் உள்ள கிளைக்கு அருகே வந்தபோது கிரிஷ் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கினார்.
அப்போது காரிலிருந்த 3 மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு அவரிடமிருந்த பணப்பையை பறிக்க முயன்றனர். தன்னை காப்பாற்றுமாறு கிருஷ் அலறி அடித்துக்கொண்டு கத்த தொடங்கினார். அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அட்டிகா நகை கடையின் உள்ளேயிருந்த சையத் சுல்தான் என்ற பாதுகாவலர் தன்னிடம் இருந்த துப்பாக்கி ஏந்திக்கொண்டு ஓடி வந்தார்.
பாதுகாவலர் வருவதை கண்ட உடன் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மர்மநபர்கள் கைத்துப்பாக்கியும், இரும்பு ராடும் வைத்திருந்ததாகவும் அவர்கள் இந்தி மொழியில் பேசி கொண்டிருந்ததாகவும் காவல்துறையினரிடம் கிரிஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்பவம் குறித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது தி.நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.