வாழைப்பழத்தை பறிக்க சென்றவர்களை காண்டாமிருகம் விரட்டிய சம்பவமானது பிரான்ஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழைப்பழத்திற்கு ஆசைப்பட்டு காண்டாமிருகத்திடம் சிக்கிய 2 பேர்! திக் திக் நிமிடங்கள்! இறுதியில் நடந்தது என்ன?

பிரான்ஸ் நாட்டில் நிக்லோலேண்ட் என்ற இடமுள்ளது. இது ஒரு திறந்தவெளி உயிரியல் பூங்காவாகும். இந்த வன உயிரினங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் இந்த பகுதியில் வாழைப்பழத்தை பறிப்பதற்காக 2 இளைஞர்கள் சென்றுள்ளனர். இவர்களும் நடமாட்டத்தை கண்ட வெள்ளை காண்டாமிருகமானது அவர்களை துரத்த தொடங்கியது.
காண்டாமிருகம் துரத்துவதை கண்ட இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் இருந்த சிறிய மரத்தின் மேல் ஏறிக்கொண்டனர். அவர்கள் இறங்கும் வரை அந்த காண்டாமிருகம் கடும் கோபத்தில் அங்கேயே இருந்தது. வனத்துறையினர் விரைந்து வந்து அந்த காண்டாமிருகத்தின் அங்கிருந்து விரட்டியடித்தனர்.
பின்னர் அந்த இளைஞர்களை பத்திரமாக வெளியே அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது பிரான்ஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.