ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் இன் உடல் முழுவதுமாக மீட்கப்படவில்லை எனவும் சிறுவனின் கைகள் மட்டும்தான் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது எனவும் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுர்ஜித்தின் கைகள் மட்டும் தான் வெளியே எடுக்கப்பட்டது! உடல் சிதைவுகள் உள்ளே தான் இருக்கிறது! சற்று முன் வெளியான பேரதிர்ச்சி தகவல்!

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு நடுக்காட்டுப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரிட்டோ என்பவர் வசித்து வருகிறார். இவர் தோட்டத்துடன் அமைந்த வீடு ஒன்றை அப்பகுதியில் விலைக்கு வாங்கியுள்ளார். அந்த தோட்டத்தில் விளையும் சோளத்தை தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஆழ்துளை கிணறு ஒன்றை அமைத்தார். இந்த கிணற்றுக்கு அருகே பிரிட்டோவின் 2 வயது குழந்தையான சுஜித் விளையாடி கொண்டிருந்தது.
விளையாடி கொண்டிருந்த சுஜித் தவறி ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. குழந்தை கிணற்றில் விழுந்த உடன் பதறிப்போன பிரிட்டோ தன்னுடைய நண்பர்களுடன் விரைந்து மீட்க முயற்சித்தார். 25 அடியில் குழந்தை சிக்கிக்கொண்டதால் அவர்களால் மீட்க இயலவில்லை. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காவல்துறையினர், தீயணைப்பு படையினர், பேரிடர் மேலாண்மை குழுவினர் மற்றும் பொதுமக்கள் குழந்தையை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
மீட்பு குழுவினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் மீட்புக் குழுவினரால் சிறுவன் சுர்ஜித்தை உயிரோடு காப்பாற்ற இயலவில்லை. கிட்டத்தட்ட 80 மணி நேர போராட்டம் பெரும் தோல்வியில் முடிந்துவிட்டது. இதனையடுத்து நேற்றைய தினம் பக்கவாட்டில் குழி அமைத்து அதன் மூலம் வீரர்களை உள்ளே அனுப்பி குழந்தையை மீட்டு வரும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அந்தவகையில் நேற்று இரவு சரியாக 09:55 மணிக்கு , தீயணைப்பு வீரர் அஜித் குமார் என்பவர் குழிக்குள் இறங்கி மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக அதிர்ச்சித் தகவலை கூறியிருந்தார். இதனையடுத்து சுஜித் இன் உடல் ஏர் லாக் செய்யப்பட்டு மேலே கொண்டுவரப்பட்டது . அப்படி கொண்டு வந்த உடலை பிளாஸ்டிக் கவரின் மூலம் கவர் செய்து எடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆழ்துளை கிணற்றில் இருந்து கொண்டுவரப்பட்டது சுர்ஜித் -ன் கைகள் மட்டும் தான் என்றும் அவரது பெரும்பகுதியான உடல் பகுதிகள் அந்த குழியின் உள்ளே புதைக்கப்பட்டது என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஏர்லாக் மூலம் சிறுவன் சுர்ஜித் -ன் உடலை மேலே இழுத்த பொழுது அவரது கைகள் மட்டும்தான் கிடைத்ததாகவும் அவருடைய உடல் பகுதி குழியினுள் மாட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு சிறுவனின் பெரும்பகுதியான உடல் மிகுந்த ஆழத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆகையால் கைகளை மட்டும் மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
இதன் காரணமாக சிறுவனின் மற்ற உடல் பாகங்களை மீட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் சிறுவனின் உடலை முழுவதுமாக மீட்டு விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்ட நிலையில் , சிறுவன் சுஜித்-ன் கைகள் மட்டும்தான் மீட்கப்பட்டது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.