ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு நிரந்தர அரசு வேலை! இந்திய வரலாற்றிலேயே முதல்முறை! சாதனை படைக்கும் ஜெகன்!

ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கி இந்தியாவையே தன்மீது ஜெகன்மோகன் ரெட்டி திருப்பியுள்ள சம்பவமானது ஆந்திராவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவை தொடுக்க வைத்து ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்ற தொடக்கத்திலிருந்தே ஆந்திர மக்களுக்கு பல வகையான சலுகைகளை அறிவித்து வந்தார். இவருடைய 100 நாட்கள் மக்களிடையே வெகுவாக வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் மீண்டும் ஒரு அதிரடி தீர்த்தத்தால் நாட்டையே ஜெகன்மோகன் ரெட்டி தன் பக்கம் திரும்பியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் கிராமப்புறங்களில் புதிதாக ஊராட்சி மன்றங்களும், நகர்ப்புறங்களில் வார்ட் மன்றங்களும் உருவாக்கப்படுகின்றன.

இவற்றில் பணிபுரிவதற்காக கிட்டதட்ட 20 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்ததில் 19.8 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அவர்களுள் 1.98 லட்சம் பேர் தேர்வில் வெற்றி பெற்றனர்.

நேற்று விஜயவாடாவில் நிகழ்ந்த அரசு நிகழ்ச்சியில் ஜெகன்மோகன் ரெட்டி, 1.26 லட்சம் பேருக்கு வேலை வழங்கி சாதனை படைத்தார். முதல் முறையாக ஒரு மாநில அரசானது 1 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளது. இதில் பஞ்சாயத்து ராஜ், ஊரக மேம்பாடு, வருவாய், சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணியமர்த்தப்படுவர்.

இந்த விழாவில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் லஞ்சமின்றி பணியாற்ற வேண்டும். செய்யப்போகும் வேலையை வேலை என்று கருதாது சேவை என்று கருதி செய்ய வேண்டும். இதுபோன்று ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் உம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வுகள் வைக்கப்படும்" என்று கூறினார்.

இந்த அறிவிப்பினால் அதே பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.