உத்தரபிரதேச மாநிலத்தில் வாரணாசி பகுதியை சேர்ந்த இந்து பெண் ஒருவர் மலேரியா நோயினால் இறந்துள்ளார். இந்நிலையில் அருகில் இருந்த இஸ்லாமிய உறவினர்கள் அப்பெண்ணை இறுதி ஊர்வலத்தில் தங்களது தோள்களில் சுமந்து சென்றுள்ளனர்.
19 வயது இளம் பெண் திடீர் மரணம்! சடலத்தை தோளில் சுமந்து சென்று இறுதிச் சடங்கு! நெகிழ வைத்த இஸ்லாமியர்கள்! ஏன் தெரியுமா?

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைத்தளத்தில் இந்த புகைப்படத்தை பார்த்த பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சேர்ந்தவர் சோனி(19) இவரது தந்தை ஹரிலால் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பக்கவாத நோய் ஏற்பட்டது.இந்நிலையில் இவர் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இவரது தாய் இதய நோயாளி இவரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கி சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் சோனியின் சகோதரர்தான் தனி ஒரு ஆளாக குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சோனி மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் திடீரென சோனி உயிரிழந்தார்
. இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரர் சோதனை இறுதிச்சடங்கு செய்வதற்கு தன்னிடம் போதிய அளவு பணம் இல்லை என மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளார். இதை அறிந்த அருகில் இருந்த இஸ்லாமிய உறவினர்கள் சோனியின் இறுதிச் சடங்கை நாங்கள் எடுத்த நடத்துகிறோம் என்று சோனியின் சகோதரனுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
பின்னர் சோனியின் இறுதி ஊர்வலத்தின்போது சோனியின் உடலை தங்களது தோள்களில் சுமந்து சென்றுள்ளனர் அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்கள். இறுதி ஊர்வலத்தில் இந்துக்கள் வழக்கமாக சொல்லப்படும் ராம் நாம் சத்யா கே என்ற கோஷத்தையும் வழி எங்கும் உச்சரித்துக் கொண்டே சென்றுள்ளனர்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இதையடுத்து அதில் உள்ள ஒரு இஸ்லாமிய நண்பர் நாங்கள் அனைவரும் ஒன்றே எங்களுக்குள் எந்த பிரச்சனைகள் இருந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்தாமல் ஒன்றாக இணைந்து இந்த ஊர்வலத்தை நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார். இப்புகைபடமானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.