நடிகைகள் காணாமல் போனால் தான் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா என உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி எழுப்பியுள்ளது.
நயன்! அனுஷ்கா! காணாமல் போனால் தான் தேடுவீர்களா? உயர்நீதிமன்றம் டென்சன்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது 19 வயது மகள் ஆறு மாதங்களுக்கு முன்னர் மாயமாகி விட்டதாக மகேஸ்வரி கூறியுள்ளார். மகள் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
தனது மகளை தேடி கண்டுபிடித்து ஒப்படைக்க போலீசுக்கு உத்தரவிடுமாறு மகேஸ்வரி உயர்நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி கிருபாகரன், போலீசார் சாதாரண மக்கள் அளிக்கும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
இதுவே போலீசார் வீட்டுப் பெண்கள் காணாமல் போயிருந்தால் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருப்பார்களா என்றும் அவர் வினவினார். நடிகைகள் அனுஷ்கா நயன்தாரா போன்றோர் காணாமல் போனால் தான் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா என்றும் பிரபாகரன் கேள்வி எழுப்பினார்.
காணாமல் போன இளம் பெண்ணை கண்டுபிடித்து ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டு போலீசாருக்கு நீதிபதி ஆணையிட்டார்.