கொரோனா வைரஸ் தாக்குதலினால் 14 வயது சிறுவன் உயிரிழந்திருப்பது போர்ச்சுகல் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவுக்கு முதன் முறையாக பலியான பள்ளி மாணவன்..! இளம் வயதில் உயிரிழந்த முதல் சிறுவன்..! எங்கு தெரியுமா?

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 33,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 7,20,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது மெல்லமெல்ல ஐரோப்பா கண்டத்திலுள்ள பல நாடுகளை பாதித்து வருகிறது. அதன்படி இந்த நோய் பாதிப்பினால் போர்ச்சுகல் நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில், நேற்று ஒருநாளில் புதிதாக 792 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பும் எண்ணிக்கையானது 119 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை போர்ச்சுகல் நாட்டில் மொத்தம் 5,962 பேர் இந்த நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போர்ச்சுகல் நாட்டின் வடமேற்கில் கடற்கரை நகரமான போர்ட்டோ அமைந்துள்ளது. இந்த நகரத்தில் வசித்து வரும் 14 வயது பள்ளிக்கூட மாணவர் ஒருவர், நேற்று முன்தினம் இந்த வைரஸ் தாக்குதலின் அறிகுறிகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த மாணவர்கள் உடல்ரீதியாக வேறு எந்த சிக்கலுமில்லை. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாணவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஐரோப்பா கண்டத்திலேயே மிகவும் இளம் வயதில் வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்த சோகமானது இந்த மாணவனையே சாரும்.
இதற்கு முன்னதாக பிரான்ஸ் நாட்டில் 16 வயது மாணவி உயிரிழந்ததால் மிகவும் குறைவான வயதில் உயிரிழந்ததாக கருதப்பட்டது. இந்த செய்தியானது போர்ச்சுகல் நாட்டினரை பெரிதளவில் பாதித்துள்ளது.