ZOMOTO உடன் மோதும் இந்துக்கள்! ஒரே நாளில் இவ்வளவு பேர் அன்இன்ஸ்டால் செய்தனர்! காரணம் என்ன தெரியுமா?

டெல்லி: சொமாட்டோ நிறுவனத்தின் சேவையில் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் பலரும் அந்நிறுவனத்தின் தர மதிப்பீட்டை குறைக்க தொடங்கியுள்ளனர்.


அண்மையில் முஸ்லீம் ஒருவர் டெலிவரி செய்ததால் அந்த உணவை சாப்பிட முடியாது எனக் கூறி இந்து ஒருவர் ட்விட்டரில் சொமாட்டோ நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்குப் பதில் அளித்த சொமாட்டோ நிறுவனம், உணவில் மதம் எதுவும் கிடையாது என்று கூறியது. ஆனாலும், இந்து மக்களிடையே இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், முஸ்லீம் மக்களுக்காக, ஹலால் செய்யப்பட்ட இறைச்சியை சொமாட்டோ விற்பனை செய்வது பற்றி பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினர். இந்துக்களுக்கு உணவில் மதம் பார்க்கக்கூடாது என அறிவுறுத்தும் சொமாட்டோ முஸ்லீம்களுக்கு எப்படி ஹலால் இறைச்சி விற்க முடிகிறது என்றும் அவர்கள் விமர்சித்தனர். 

மேலும், சொமாட்டோ நிறுவனத்தின் தர மதிப்பீட்டை பலரும் குறைத்து வருகின்றனர். ஒரு ஸ்டார் அளவுக்கு அதன் தர மதிப்பீட்டை குறைப்பதால், சொமாட்டோவின் சேவையில் திடீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் சொமாட்டோ சேவையை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஆதரவும், எதிர்ப்பும் ஒரே நேரத்தில் பன்மடங்கு குவிந்து வருவதால் சொமாட்டோ நிறுவனம், குழப்பத்தில் உள்ளது.