அடுத்தடுத்து பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள்! ZOMATO நிறுவன பணியாளர்களுக்கு திக் திக் அனுபவம்!

டெல்லி: சோமேட்டோ நிறுவனத்தின் ஊழியர்கள் 541 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


 ஆன்லைன் உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள சோமேட்டோ நிறுவனம் அதிரடியாக மேற்கொண்டுள்ள இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை, அதன் ஊழியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதற்கு காரணம், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட தானியங்கி பாட்களை ஆன்லைன் சேவைகளுக்குப் பயன்படுத்த தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், வாடிக்கையாளர்களின் ஆன்லைன் கேள்விகளுக்குப் பதில் அளிக்க ஆட்கள் யாரும் தேவையில்லை. தானியங்கி பாட்களே அதனை பார்த்துக் கொள்ளும்.   ''இது சற்று வலி தரக்கூடிய முடிவாக இருந்தாலும், இதனை எளிதாகச் செயல்படுத்த ஊழியர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த முடிவால் பாதிக்கப்படக்கூடிய ஊழியர்கள், அடுத்த 2 மாதத்திற்கு உரிய சம்பளம், குடும்பத்தினருக்கான இன்சூரன்ஸ் உதவி (2020 வரை), மற்றும் புதிய வேலைவாய்ப்புக்கான பரிந்துரை உள்ளிட்டவை செய்துதரப்படும்,'' என்று சொமேட்டோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.  

அண்மையில் இஸ்லாமியர் உணவு விநியோகித்ததால் அதனை வேண்டாம் என சொமேட்டோ வாடிக்கையாளர் நிராகரித்ததும், அதற்கு சொமேட்டோ நிறுவனம் அதிரடி பதில் அளித்து, சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதும் இங்கே குறிப்பிட வேண்டிய விசயமாகும்.