ஆணுறை பயன்படுத்துங்கள்..! சொமாட்டோ டெலிவரி பாய்க்கு கஸ்டமர் கொடுத்த பகீர் அட்வைஸ்!

வீடு தேடி உணவு விநியோகம் செய்யும் ஒருவருக்கு வாடிக்கையாளர் ஒருவர் ஆணுறை பயன்படுத்துமாறு கூறிய ஆலோசனை தற்போது சமூக வலைதள வாசிகளை ஆக்கிரமித்து உள்ளது.


வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வயது பாகுபாடு இல்லாமல் பழகும் நண்பர்கள் யார் வேண்டுமானாலும் சாதி, மதம், ஏழை, பணக்கார பாகுபாடு இன்றி பாராட்டுகின்றனர் அல்லது குறைகளை சொல்லுகின்றனர். சில சமயங்களில் சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் நெருங்கிய நண்பர்களை கூட பிரித்து விடுகிறது.  

ஆனால் அறிமுகம் இல்லாமல் வீட்டிற்கு உணவு கொண்டு வந்த நபருக்கே ஆணுறை பயன்படுத்துமாறு வாடிக்கையாளர் நெக்கலாக பதிவு செய்த டிவிட்டர் பதிவு அனைவரையும் பேச வைத்துள்ளது. தற்போது உணவு உள்பட எது வேண்டுமானாலும் ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்யும் பழக்கம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.  

ராம் என்பவர் சொமாட்டோ வழியாக உணவு ஒன்று ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு உணவு கொண்டு வரும் நபர் குறித்த தகவல்கள் அவரது மொபைலுக்கு வந்து உள்ளது. அதில் உங்களுக்கு உணவு கொண்டு வருபவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு 4 மகள்கள், 7 மகன்களும் இருக்கிறார்கள் என்ற தகவலும் வந்தது.

இதை தன்னுடைய செல்போனில் படம் பிடித்த ராம் தன்னுடைய டிவிட்டரில் பதிவேற்றி உள்ளார். அந்த பதிவின் கீழ் “இவர் நிச்சயம் ஆணுறை அணிய வேண்டும். இதுதான் அவருக்கு நான் தரும் இலவச டிப்ஸ்'', கமெண்ட் போட்டுள்ளது வைரலாகி வருகிறது.