உலகின் மிகப்பெரிய விநோத உயிரினம்! கண்டுபிடித்த ஆய்வாளர்களுக்கே பீதி கிளப்பும் தோற்றம்!

டெல்லி: உலகின் மிகப்பெரிய 'இருவாழ்வி' கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


இதுபற்றி Phys.org இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜூவாலாஜிக்கல் சொசைட்டி ஆஃப்  லண்டன் (ZSL) மற்றும் லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் ஆகியவற்றின் சார்பாக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அது, கடந்த 1920களில் சீனாவில் இருந்து சேகரிக்கப்பட்ட ராட்சத சாலமண்டர் உயிரினத்தின் பதப்படுத்தப்பட்ட சாம்பிளாகும்.

அவற்றில் இருந்து டிஎன்ஏ மாதிரி எடுத்து ஆய்வு மேற்கொண்டதில், உலகிலேயே உயிர் வாழும் இருவாழ்வி உயிரினம் இந்த வகை சாலமண்டர்கள்தான் என தெரியவந்துள்ளது. சீனாவில் வசிக்கும் இந்த ராட்சத சாலமண்டர்கள் பார்ப்பதற்கு பல்லி போலவே இருக்கும்.

ஆனால், நீரிலும், நிலத்திலும் வசிக்கக்கூடியதாகும். சுமார் 5 அடி நீளம் வளரக்கூடிய இந்த ராட்சத சாலமண்டர்கள், தற்போது அருகி வரும் உயிரினமாக ஆபத்தில் உள்ளது. ஆனால், இன்றைய சூழலில் இவை கண்முன்னே உயிர் வாழ்வதால் இவற்றின் பரிணாம வளர்ச்சி பற்றி பலவித தகவல்களை இனிவரும் நாட்களில் ஆராய்ந்து சேகரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.