24 மணி நேரமும் புத்தம் புதிய மற்றும் எவர்க்ரீன் படங்கள்! ஒளிபரப்பை துவங்கியது ஜீ திரை..! கே டிவிக்கு போட்டி!

ஜீ தமிழ் சேனல் தென்னிந்திய மக்களின் மனதில் மாறாத இடம் பெற்ற சேனலாக மாறியுள்ளது, அதிலும் சமீப காலமாக அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்களை அவர்கள் பக்கம் இழுத்துள்ளது எனலாம்.


அந்த வகையில் ஜீ திரை என ஜீ குழுமத்தின் புதிய சேனல் விரைவில் களம் இறங்குகிறது. வழக்கமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மட்டுமே அல்லாமல். இந்த ஜீ திரை சேனல் மூலமாக சுமார் 400 மேலான புதிய படங்களை வாரம் ஒரு புது படம் என்ற வகையில் வெள்ளி கிழமை தோறும் ஒளிபரப்ப உள்ளனர்.

மேலும் இந்த படங்களுக்கு எந்த கமர்ஷியல் பிரேக்கும் இல்லாம முழு படமும் ஒளிபரப்ப இருப்பதாகவும் ஜீ தமிழ் அதிகார பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. ஜீ தமிழ் சினிமா விருதுகள் 2020 மூலமாக பிக் பாஸ் நாயகன் கமல் ஹாசன் அவர்கள் முன்னிலையில் இந்த ஜீ திரை சேனலுக்கான பிரத்யேக திறப்பு மற்றும் அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் ஏற்கனவே , ஜீ தமிழ், ஜீ கேரளம், ஜீ சினிமாலு, ஜீ கன்னடம்,ஜீ தெலுங்கு என 5 சேனல்கள் உள்ள நிலையில் திரைப்படங்களுக்காக இது ஆறாவது சேனல். மேலும் ,முன்னணி DTH ஆப்பரேட்டர்களான டாடா ஸ்கை (சேனல் எண். 1599), ஏர்டெல் DTH(சேனல் எண். 775), ஆகியவற்றில் இந்த சேனல் கிடைக்கும். கேபில் டிவி சந்தாதார்கள் ரூபாய் பன்னிரண்டு செலுத்தி ஜீ பிரைம் மூவி பேக் தமிழ் பெறலாம்.