ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் யாரடி நீ மோகினி.
யாரடி நீ மோகினி சீரியல் நாயகி வெண்ணிலாவின் காதலர் இவரா? வைரலாகும் புகைப்படம் உள்ளே!

யாரடி நீ மோகினியில் நாயகியாக நடித்து வருபவர் நட்சத்திரா. இவர் உண்மையில் கேரளாவைச் சேர்ந்தவர். சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்பை தேடி கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிடா பூசாரி மகுடி’ என்ற படத்தில் அறிமுகமானார்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராம்தேவ் என்பவர் நடித்திருப்பார். இந்த படத்தின் போது இருவரும் காதலில் விழுந்து காதலிக்க தொடங்கியுள்ளனர். அதன் பின்னர்தான் யாரடி நீ மோகினி சீரியல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது இருவரும் காதலித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற உள்ளது. நட்சத்திராவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவரது காதலர் குறித்த தகவல்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.