முதல் மாதம் வெறும் ரூ.7000! இப்போது லட்சங்களில் புரளும் டாடி ஆறுமுகம்! YouTubeஐ ஆளும் கிராமத்து சமையல் கலைஞர்!

தற்போது யூடியூபில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நிகழ்ச்சி "வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி" கிராமிய சமையல் கலையை கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கதாநாயகனாக வலம் வருபவர் "டாடி ஆறுமுகம்" சாதாரண பெயிண்டிங் காண்ட்ராக்டராக இருந்த ஆறுமுகம் தற்போது யூடியூபில் ஜொலித்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


கிராமிய முறைகளை முன்னெடுக்கும் இயற்கையான சூழலில் சமைத்து சாப்பிடுவது போல யூட்யூபில் வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி என்ற சேனலில் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் "டாடி ஆறுமுகம்" தற்போது அவரின் வாழ்க்கை வரலாறு பற்றி பார்ப்போம். 

ஆறுமுகம் ஒரு ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர் அன்றாட சாப்பாட்டிற்கு வறுமையான சூழலில் வளர்ந்துள்ளார். தனது படிப்பை 6 ஆம் வகுப்பிலேயே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று துணி வியாபாரமும் செய்து வந்துள்ளார்.

அதிலும் நஷ்டத்தையே சந்தித்த இவர் குடை செய்பவர் மற்றும் ஏலக்காய் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.தற்போது தேனியில் தனது மகனுடன் வசித்து வருகிறார். இவரது மகன் கோபி தொடங்கிய யூடியூப் சேனலில் இப்போது கருங்கோழி பிரியாணி, முழு ஆடு ரோஸ்ட் , விதவிதமான மீன் வறுவல் என அசத்தும் ஆறுமுகத்துக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உள்ளனர்.

இந்நிலையில் தனக்கு சமையல் செய்ய கற்றுக் கொடுத்தது சுப்பம்மா என்கிறார். ஏலக்காய் பண்ணை தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு சுப்பம்மா என்ற பெண்மணி தான் முதலில் தனக்கு சமைக்கச் சொல்லி கொடுத்ததாகவும் பின்னர் அவரை பின்பற்றிய தானும் கிராமிய சமையல் முறைகளை நன்றாக கற்று வந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவரது மகன் கோபிநாத் டிப்ளமோ முடித்து விட்டு சினிமாத்துறையில் வாய்ப்பு தேடி சென்னைக்கு சென்றுள்ளார்.

அப்போது இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் இருந்ததாகவும் பின்னர் பல்வேறு கஷ்டங்களை சந்தித்த பிறகு திரும்பவும் தனது சொந்த ஊரான தேனி வந்து அங்கு "ஹோட்டல் மாமியா" இந்த உணவகத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். பின்னர் ஆட்களை வைத்து பெயின்டிங் கான்ட்ராக்ட் தொழிலும் செய்து வந்துள்ளார்.

தனது மகன் கோபிநாத் சினிமாவில் தான் சாதிக்க முடியவில்லை அதனால் யூடியூப் சேனல் தொடங்கப் போவதாக தெரிவித்த நிலையில் அவருக்கு ஆறுமுகமும் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.இதையடுத்து அந்த சேனலில் கிராமிய முறை சமையல்கலை முன்னெடுத்து வீடியோக்கள் வருவதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

இதை ஏற்றுக் கொண்ட ஆறுமுகம் முதலில் இதெல்லாம் சரிப்பட்டு வராது என கூறியுள்ளார். பின்னர் தனது மகன் கூறுவது போல சமையல் செய்யும்போது வீடியோ எடுத்து அதை தனது சேனலில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு முதல் மாத வருமானமாக 7000 கிடைத்துள்ளது பின்னர் அடுத்த மாதம் சுமார் 40 ஆயிரம் வரை வருமானம் வந்ததாக தெரிவித்துள்ளனர். பின்னர் நாட்கள் செல்ல செல்ல லட்சக்கணக்கில் வருமானம் வந்ததாகவும் அதை வைத்து தான் வீடு ஒன்றை வாங்கி விட்டதாகவும் டாடி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த கோபிநாத்திடம் கேட்டபோது அவர் அதற்கு முதலில் எங்கள் சேனலுக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்காது என நம்பினோம் பின்னர் மக்களின் ஆதரவோடு நாங்கள் இந்த சேனலை தொடர்ந்து நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.டாடி ஆறுமுகம் - 30 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட "வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி" என்ற யூடியூப் சேனலின் கதாநாயகன்.