திருமணமான பரிமளாவுடன் தகாத உறவு! குறுக்கே வந்து இடையூறு செய்த சித்தி! இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

சென்னை: பரிமளாவுடன் பழகக்கூடாது என சித்தி கன்டிஷன் போட்டதால், இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார். 25 வயதாகும் மனோஜ்க்கு, தாய், தந்தை கிடையாது. திருமணம் ஆகாமல் தனிமையில் வாடிய மனோஜ்குமார், அதே பகுதியை சேர்ந்த பரிமளா என்ற பெண்ணிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார். பரிமளா ஏற்கனவே திருமணமாகி, கணவனை இழந்தவர் ஆவார்.

அவருக்கு, 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், பரிமளாவுடன் பழகக்கூடாது என்று கூறி மனோஜ்குமாரை அவரது சித்தி கடுமையாகக் கண்டித்துள்ளார்.  

அவரது பேச்சை கேட்காமல், பரிமளாவை வீட்டிற்கே அழைத்து வந்து, குடித்தனம் வைத்திருக்கிறார் மனோஜ். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவருக்கும், அவரது சித்திக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதன்பேரில், மனம் உடைந்து காணப்பட்ட மனோஜ், திடீரென இன்று (செப்டம்பர் 20) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.