தமிழகத்தில் சென்னையைத் தவிர பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு சுறுசுறுப்பாகவே நடந்துவருகிறது. இந்த நிலை மாலை வரை நீடிக்கும்போது எப்படியும் 75% வாக்குப் பதிவை தொட்டுவிடும் என்று நம்பப்படுகிறது.
காலையிலேயே வாக்களிக்க திரண்ட இளைஞர்கள்! குடும்பத்தோடு சென்ற பெருசுகள்! ஆபத்து எந்த கட்சிக்கு?

பொதுவாக ஏதேனும் ஆதரவு அலை அல்லது எதிர்ப்பு அலை வீசும்போது மட்டுமே வாக்குப்பதிவு 65% தாண்டிச்செல்லும். எப்போதும் 85% தாண்டாது என்றாலும் 70சதவீதத்தைத் தாண்டுவதே நல்ல அறிகுறியாகவே கருதப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளும் கட்சி மற்றும் பா.ஜ.கட்சிக்கு எதிர்ப்பு அலையினால் இத்தனை கூட்டம் கூடுகிறதா அல்லது இதே ஆட்சி தொடரவேண்டும் என்று மக்கள் ஒன்றுகூடி வாக்களிக்கிறார்களா என்பதை உடனடியாக கணிக்க முடியாது.
ஆனால், கடந்த முறை தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா அள்ளியது ஓன்று ஒட்டுமொத்தமாக ஓட்டுக்களை ஏதோ ஒரு கட்சி அள்ளப் போகிறது என்பது உறுதி. அது எதுவென தெரிந்துகொள்ள மே வரையிலும் காத்திருப்போம்.