தீபாவளியை கொண்டாட பட்டாசு வெடித்த இளைஞர்! சிறைக்கு அனுப்பி நீதிபதி அதிரடி!

பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவை சேர்ந்த ஜீவன் அர்ஜூன் என்ற 29 வயது இளைஞர், சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று நள்ளிரவு 3 மணியளவில் வீட்டுமுன் பட்டாசுகளை வெடித்துள்ளார் இவர். 

சுமார் 5 நிமிடம் பயங்கர சத்தத்துடன் நடந்த இந்த வானவேடிக்கை அக்கம்பக்கத்தினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.  இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த மாவட்ட நீதிபதி மார்வின் பே தீர்ப்பளித்தார்.

குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் பட்டாசு வெடித்ததால், ஜீவன் அர்ஜூனுக்கு 3 வார கால சிறைதண்டனை மற்றும் இரண்டரை லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். சிங்கப்பூர் விதிகளின் படி பட்டாசு வெடிப்பது தண்டனைக்கு உரிய குற்றமாகும்.