YouTube பார்த்து கள்ள நோட்டு அடித்த மாடர்ன் மங்கை! கத்தை கத்தையாக பணத்துடன் சிக்கினார்!

யூட்யூப் பார்த்து கள்ள நோட்டு அடித்து புழக்கத்தில் விட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.


கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள பழக்கடைக்கு சுடிதார் அணிந்து மாடர்னாக வந்த இளம் பெண் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து பழம் வாங்கியுள்ளார். ஆனால் அந்த ரூபாய் நோட்டை பார்த்ததும் பழம் விற்பனை செய்த தமிழரசிக்கு சந்தேகம் வந்தது.

உடனடியாக 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை வாங்கி வருவதாக கூறி தமிழரசி அங்கிருந்து சென்று காவல் நிலையத்தில் நடந்தவற்றை கூறினார். ரூபாய் நோட்டை வாங்கி பார்த்த போலீசார் அது கள்ள நோட்டு என்பதை கண்டறிந்தனர்.

இதனை அடுத்து தமிழரசியுடன் வந்த போலீசார், கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற பெண்மணியை வசமாக பிடித்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் அவரிடம் விசாரித்தனர்.

அப்போது அவர் சிதம்பரத்தை சேர்ந்த பரணிகுமாரி என்பது தெரியவந்தது. படித்த பட்டதாரியான பரணிகுமாரி YouTube வீடியோ பார்த்து கள்ள நோட்டுகளை அடித்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து பரணிகுமாரியிடம் இருந்து கத்தை கத்தையாக கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடன் தொல்லை அதிகமாக இருந்த காரணத்தினால் யூட்ப்யூப் பார்த்து கள்ள நோட்டு அடித்து சிக்கியதாக பரணிகுமாரி தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கள்ள நோட்டு அடிக்க பயன்படுத்திய லேப்டாப், ஜெராக்ஸ் மிசின் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.