29 வயதில் திருமணம் நிச்சயம்! அழகாய் மாற பியூட்டி பார்லர் சென்ற புதுப் பெண் மாயம்! மதுரை திக்திக்!

மதுரையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த இளம் பட்டதாரி பெண் மாயமானதை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


மதுரை நத்தப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவரது மகள் மகாலட்சுமி. இவர் பொறியியல் படித்துவிட்டு சென்னையில் தங்கி இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.  

இவருக்கு உறவினருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இம்மாதம் 24-ம் தேதி திருமணம் நடைபெற இருந்ததால், விடுப்பு எடுத்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார் மகாலட்சுமி. 

சம்பவம் நடந்த தினத்தன்று காலை வெளியே சென்று விட்டு வருவதாக கூறிய மகாலட்சுமி இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடி பார்த்தும் மகாலட்சுமி கிடைக்காததால், அருகில் இருந்த காவல் நிலையத்தில் மகா லட்சுமியின் தந்தை கணேசன் புகார் அளித்துள்ளார்.  

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர் வனிதா, இளம்பெண் மகாலட்சுமியை தீவிரமாக தேடி வருகிறார்.