இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்! 5 பேர் சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் பிடித்த சாபக் கேடாக கூட்டுப் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களையும், சிறுமிகளையும் குறிவைத்து அலையும் வெறிபிடித்த ஓநாய்கள் கும்பலாகத் தான் சுற்றித் திரிகின்றன.
அந்த வரிசையில் உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் மாவட்டத்தில் 23 வயது இளம் பெண் ஒருவர் 5 மிருகங்களால் வேட்டையாடப்பட்டுள்ளார். மாவட்டத்தின் மன்சூர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஸிப்புரா என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் கடந்த வெள்ளிக்கிழமை 5 நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார்.
அந்தப் பெண் மன்சூர்பூர் போலீசாரிடம் கொடுத்த புகாரில் தன்னை கடத்திச் சென்ற அந்த நபர்கள் தன்னை ஒரு அறையில் அடைத்து வைத்ததாகவும், பின்னர் அவர்கள் அறைக்குள் வந்து மாறி மாறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் தன்னை அந்த அறையிலேயே விட்டுவிட்டு அவர்கள் தப்பியோடியதாகவும் அவர் கூறியுள்ளார். அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
தேடிக் கண்டுபிடித்தாலும் போலீசார் என்ன செய்யப் போகிறார்கள் வழக்கம் போல தங்கள் மந்தமான வழக்கு நடைமுறைகளை தொடருவார்கள்.
வழக்கு முறையாக நீதிமன்றத்துக்கு சென்றாலும் வாய்தா, ஜாமீன், சந்தேகத்தின் பலன் என சட்டத்தின் பல ஓட்டைகள் அந்த நபர்கள் சுதந்திரமாக சுற்றி வர வாய்ப்பளிக்கின்றன
அதற்கு பதில் இதுபோன்ற வழக்குகளில் சிக்கும் நபர்களை பிடிபட்டவுடனேயே மக்களிடம் ஒப்படைத்து கலவரம் என்ற பெயரிலோ, அல்லது போலீசார் சில நேரங்களில் கையாளும் வேறுவிதமான நடைமுறைகளைச் சார்ந்தோ அவர்களின் கொழுப்புக்கு காரணமான உறுப்பை அறுத்துவிட்டு தெருவில் திரிய விட்டுவிடலாம் என்று கூறுகிறார்கள் பெண்களை பெற்றவர்கள்.