நாமக்கல் அருகே பள்ளி ஆசிரியை வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்துள்ளார், அவர்களது திருமணத்திற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளம் டீச்சரின் உயிரை குடித்த ஜாதி வெறி! ஹாஸ்டலில் சடலமாக தொங்கினார்!

நாமக்கல் மாவட்டம் வேட்டம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவர் தூத்துக்குடியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருடைய மகள் பிரதீபா (வயது 25)கிணத்துக்கடவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார்.
பணி நிமித்தமாகன் கிணத்துக்கடவு பகுதியில் விடுதியில் தங்கி வேலைப்பார்த்து வந்த பிரதீபா, கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை தனது அறையில் முகத்தை துப்பட்டாவால் மூடியபடி தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து தகவல் அளிக்கபட்ட உடன் வந்த கிணத்துக்கடவு போலீசார் பிரதீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீபா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம்குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், பிரதீபா தூத்துக்குடியை சேர்ந்த ஒரு வாலிபரை 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பிரதீபாவின் பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர் எனவும் இதனால் மனவேதனை அடைந்த பிரதீபா தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
இதனை அடுத்து பிரதீபா மரணம் தற்கொலை தானா , அல்லது யாருடைய வற்புறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கபட்டதா என பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.