இணையத்தில் வெளியானது இளம் நடிகையின் அந்தரங்க புகைப்படங்கள்..! வெளியிட்டது யார் தெரியுமா?

மும்பை: நடிகையின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.


மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாலிவுட்டை நம்பி நாள்தோறும் புதுப்புது நபர்கள் வாய்ப்பு தேடி வருகிறார்கள். அப்படி வருபவர்களில் சிலர் எதிர்பாராத ஏமாற்றங்களை சந்திக்க நேரிடுகிறது.  இந்த வரிசையில், 27 வயதான இளம் நடிகை ஒருவர் நடிக்க வாய்ப்பு தேடி புகைப்பட ஆல்பத்துடன் தெரிந்தவர்களிடம்  வாய்ப்பு கேட்டு வந்துள்ளார். அவருக்கு சீரியல் ஒன்றில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, ஆண் நண்பர் ஒருவர் பழக்கமாகியுள்ளார்.

இருவரும் மிக நெருக்கமாக பழகி வந்த நிலையில்,  மற்றொரு கேஸ்டிங் டைரக்டர் மூலமாக, அந்த பெண்ணிற்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அத்துடன் அவரது ஆண் நண்பருக்கும் அதே சீரியலுக்கு தேவையான  நடிகர், நடிகையரை தேர்வு செய்து தரும் பணி கிடைத்திருக்கிறது. இதற்காக, அந்த ஆண் நண்பருக்கு, கேஸ்டிங் டைரக்டர் மகாவீர் தாக் ரூ.3 லட்சம் முன்பணம் கொடுத்துள்ளார்.  

ஆனால், பணத்தை வாங்கிக் கொண்ட நடிகையின் ஆண் நண்பர் தனக்கு தரப்பட்ட வேலையை செய்யாமல் இழுத்தடித்துள்ளார். இதனால், மகாவீரின் புது சீரியல் தொடங்கும் பணி  பாதிக்கப்பட்டது. வேறு வழியின்றி ஆத்திரமடைந்த மகாவீர், நடிகையின் ஆண் நண்பரிடம் இருந்து ஃபோனை பிடுங்கிக் கொண்டாராம். அப்போதும் தனது பணம் திரும்ப கிடைக்காததால்,  வெறுப்படைந்த அவர், அந்த நடிகையையும், அவரது ஆண் நண்பரையும் பழிவாங்கும் வகையில் போனில் இருந்த அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி தெரியவந்ததும் பாதிக்கப்பட்ட நடிகை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, கேஸ்டிங் டைரக்டர் மகாவீரை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.