ஆசையா கூப்டுறேன்..! வரமாட்றியா? 17 வயது பெண்ணின் மார்பகம், அடிவயிறு என 20 இடங்களில் கத்தி குத்து! கொடூர இளைஞன் வெறிச் செயல்!

திருவனந்தபுரம்: இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.


கொச்சியில் உள்ள அதானி பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை, இளைஞர் ஒருவர் அடிக்கடி பின்தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். இதற்கு, அப்பெண் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதன்பேரில், ஆத்திரமடைந்த அந்த இளைஞர், குறிப்பிட்ட இளம்பெண்ணை கத்தியால் சராமரியாகக் குத்தியுள்ளார். இதில், சுமார் 20க்கும் அதிகமான இடங்களில் உடல் முழுக்க ரத்தக் காயம் அடைந்த அப்பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.  

இதையடுத்து, அந்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் அமல் என்றும், 19 வயது என்றும் தெரியவந்தது. அப்பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்ததால் இந்த கொடூர செயலை அவர் செய்துள்ளதாகவும், போலீசில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.