படிக்கும் வயதில் காதலனுடன் காரில் தனிமை பயணம்..! வயல்வெளியில் சடலமாக கிடந்த பிளஸ் டூ மாணவி ஸ்டெல்லா! அதிர்ச்சி காரணம்!

காதலிக்க மறுத்ததால், மாணவியை கொலை செய்து காட்டு பகுதியில் உடலை வீசியுள்ளான் இளைஞன். போலீசில் சிக்கியதால் உண்மை வெளிவந்தது.


கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த இவா டேனியல் என்ற மனைவி அருகில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வந்த சபீர் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். சபீர் கார் பழுது பார்க்கும் இடத்தில் பணிபுரிந்து வருகிறார். 

திடீரென இவா சபீருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். பலமுறை சபீர் இவாவிடம் முயற்சி பேச செய்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் சபீர் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று பள்ளி முடித்துவிட்டு நீண்டநேரம் ஆகியும் இவா வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளார்கள்.  

அதேசமயம், சபீர் மற்றும் அவன் வேலை பார்த்த இடத்தில் கார் ஒன்றும் காணாமல் போனதால் போலீசுக்கு சந்தேகம் வலுத்தது. அப்போது இருவருக்கும் இடையே காதல் இருந்ததும் போலீசுக்கு தெரிய வந்தது. காரை தேடுவதற்கு அனைத்து காவல் நிலையத்திலும் தகவல் அனுப்பப்பட்டது. அப்போது, கார் வால்பாறை பகுதியில் சென்று கொண்டிருப்பது உறுதியானது. 

உடனடியாக, காரை வலைத்துப்பிடித்து சபீரை பிடித்தனர் போலீசார். சபீரை போலீசார் விசாரிக்கையில், இவாவை கொலை செய்து உடலை காட்டுக்குள் வீசியதாக, வீசிய இடத்தை காட்டியுள்ளான். பின்னர் உடலை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சபீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.