சென்னையில் வீட்டின் சாவி தொலைந்தது! 15வது மாடியில் இருந்து கயிறு கட்டி இறங்கிய இளைஞன்! பாதியில் அறுந்ததால் ஏற்பட்ட பயங்கரம்!

15வது மாடியில் இருந்து கயிறு கட்டி இறங்கிய இளைஞன்! பாதியில் அறுந்ததால் ஏற்பட்ட பயங்கரம்!


காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் முகமது அப்ரிடி  என்ற இளைஞர் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். திருப்போரூர் காலவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 14வது தளத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து இவர் தங்கியிருந்தார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த அப்ரிடி தனது வீட்டு சாவியை தொலைத்துள்ளார். பல இடங்களில் தேடியும் சாவி கிடைக்கவில்லை. இதனால் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து கயிறு கட்டி கீழே இறங்கி 14வது மாடியில் உள்ள தனது வீட்டிற்குள் செல்ல அப்ரிடி முடிவெடுத்துள்ளார்.

இதனை ஆடத்து இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு மொட்டை மாடியிலிருந்து 14வது மாடிக்கு இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எடை தாங்க முடியாமல் கயிறு அறுந்துள்ளது. இதனால் 14-வது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாவி தொலைந்துவிட்டால் எளிதாக மாற்று சாவி ஏற்பாடு செய்து உள்ளே சென்று இருக்க முடியும். ஆனால் விபரீத முடிவால் இளைஞர் தனது உயிரையே இழக்க நேரிட்டுள்ளது.