ஆளை மாற்றி புதுக்காதலனுடன் நெருங்கிய இளம் பெண்! நேரில் பார்த்த பழைய காதலன்! பிறகு அரங்கேறிய ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம்!

ஆஸ்திரேலியாவில் காதலி தன்னை விட்டு பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.


ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர் ஆன்ட்ரியாஸ் 25, இவர் தனது காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரது காதலி இவரை விட்டு வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த ஆன்ட்ரியாஸ் அவரது வீட்டிற்கு சென்று அங்கிருந்த அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

ஆன்ட்ரியாஸ் மற்றும் அவரது காதலியான நாடின் ஹின்டர்ஹோல்சர் 19, கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்னர் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனால் நாடின் அவரைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். இதையடுத்து அதற்கு பிறகு ஃப்ளோரியன் 24, என்ற இளைஞரை காதலித்துள்ளார்.

இதையடுத்து இருவரும் பொது இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். மற்றும் தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதைப்பார்த்த ஆன்ட்ரியாஸ் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். மற்றும் அவரைக் கொல்லவும் திட்டம் தீட்டியுள்ளார்.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நாடின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தந்தை அவரை தடுத்து நிறுத்தியுள்ளார் இதையடுத்து ஆத்திரம் அடைந்த நபர் தனது வீட்டிற்குச் சென்று துப்பாக்கியை எடுத்து வந்து முதலில் நாடினின் தந்தை ரூபர்ட், பின்னர் அவரது தாயார் ஆண்ட்ரியா 51 மற்றும் சகோதரர் கெவின் 25 ஆகியோரை சுட்டுக்கொலை செய்துள்ளான். பின்னர் மேல்தளத்தில் நாடின் அவரது புதிய காதலனுடன் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். 

அவர்கள் இருவரையும் சுட்டுக்கொண்டுவிட்டு தானே காவல் நிலையம் சென்று செய்த கொலையை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார்.இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து மேலும் விபத்து நடந்த வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு அவர்களது குடும்பமே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளது.

இதையடுத்து அவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மற்றும் ஆன்ட்ரியாஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.