கர்ப்பிணி மகளின் கணவன் என்றும் பாராமால் பெற்றோர் அரங்கேற்றிய கொடூரம்! நெஞ்சை உறைய வைக்கும் காரணம்!

குஜராத் மாநிலத்தில் பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி சாதி மாற்றி திருமணம் செய்ததால் பெண்வீட்டார் இளைஞரை வெட்டி கொலை செய்துள்ளனர்.


குஜராத் மாநிலம் காந்திதம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரேஷ் குமார் சோலங்கி 25 , இவர் அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் அவருக்கும் அகமதாபாத்தைச் சேர்ந்த ஊர்மிளா ஜலா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது முதலில் நண்பர்களாக பழகி அவர்கள் நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறியது இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

முதலில் தங்களது விருப்பத்தை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர் மணமகன் வீட்டார் இந்த காதலுக்கு ஆதரவு அளித்த நிலையில் பெண்வீட்டார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால் இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அவர்களின் எதிர்ப்பை மீறி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இருவரும் கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில் ஊர்மிளா இரண்டு மாத கர்ப்பமாக இருந்துள்ளார். பெண்வீட்டார் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் ஊர்மிளாவை சந்தித்துள்ளனர் அப்போது. ஊர்மிளாவை தங்கள் வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார் இதையடுத்து இது குறித்து ஊர்மிளா தனது கணவரிடம் தெரிவித்தபோது அவரும் அதற்க்கு சம்மதித்து உள்ளார். 

இதையடுத்து தனது  பெற்றோர் வீட்டிற்கு சென்ற ஊர்மிளா பல நாட்கள் ஆகியும் திரும்பி வராத நிலையில் அவருக்கு பல முறை போனில் தொடர்பு கொண்டபோது எந்த ஒரு பதிலும் வரவில்லை. இந்நிலையில் அதிர்ச்சியடைந்த சோலங்கி பல முறை போனில் முயற்சி செய்தும் தனது மனைவியுடன் பேச முடியவில்லையே என ஆதங்கத்தில் காவல்துறையை நாடியுள்ளார்.

காவல் நிலையத்தில் தனது மனைவியை அவர்களது பெற்றோர்கள் கொடுமைப்படுத்துவதாகவும் தனது மனைவி தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார்.அவரை என்னிடம் பேச அனுமதிக்க வில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது புகாரை ஏற்ற பெண்கள் பாதுகாப்பு துறையினர் ஒரு வாகனத்தில் பெண் காவலர் உட்பட சோலங்கி மற்றும் 3 பேர் ஊர்மிளாவின் இல்லத்தை நோக்கி சென்றனர்.

அப்போது அவரது வீட்டில் ஊர்மிளா இல்லை என தெரிகிறது. இந்நிலையில் சோலங்கி அவர்களது பெற்றோர் இடத்தில் தனது மனைவியை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஊர்மிளாவின் உறவினர்கள் சோலங்கியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி உள்ளனர் அதைத் தடுக்கச் சென்ற காவல்துறையினரையும் தாக்கியுள்ளனர்.இந்நிலையில் பலத்த காயமடைந்த சோலங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் ஊர்மிளாவின் குடும்பத்தில் உள்ள 8 பேர் மீது கொலை குற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றும் இறந்த சோலங்கியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்