மனைவியுடன் இளைஞருக்கு தகாத உறவு! தட்டிக் கேட்ட கணவனுக்கு நேர்ந்த பயங்கரம்! உசிலம்பட்டி பரபரப்பு!

முறையற்ற உறவை கண்டித்த கணவனுக்கு வெட்டு. கண்கண்ட தெய்வத்தை கன்னாபின்னமாய் வெட்டிய மனைவி.


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வருஷநாடு பகுதியில் வசித்து வருபவர் கோரி முகமது. இவருடைய மனைவிக்கும் அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் நீண்ட நாட்களாக முறையற்ற உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் உல்லாச வாழ்க்கை ஒரு கட்டத்தில் கோரி முகமதுவுக்கு தெரிய வர தன்னுடைய மனைவியையும் அவருடன் முறையற்ற உறவு வைத்திருந்த சுப்பிரமணி என்பவரையும் கண்டித்துள்ளார்.

கோரி முகமது பேச்சை கேட்க மறுத்து தங்களுடைய முறையற்ற உறவை தொடர்ந்தனர் கள்ளக் காதலர்கள். இவர்களின் உறவு கோரி முகமது வீட்டில் குடும்ப பிரச்சனை ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.  ஒரு கட்டத்தில் கோரி முகமது கண்டிப்பதை விரும்பாத அவரது மனைவி தன்னுடைய கணவரை தீர்த்துக் கட்டிவிடுமாறும் அவர் இறந்து விட்டால் நாம் உல்லாசமாக தொடர்ந்து இருக்கலாம் எனவும் சுப்பிரமணியை மூளைச் சலவை செய்துள்ளார்.

ஆசை நாயகி பேச்சை கேட்டு கோரி முகமதுவை தீர்த்துக் கட்ட முடிவு செய்த சுப்பிரமணி நண்பர் பாண்டியராஜனை அழைத்து சென்று கோரி முகமதுவிடம் பஞ்சாயத்து பேசி உள்ளார். மேலும் தான் திருந்தி விட்டதாகவும் இனிமேல் உங்கள் மனைவி பக்கம் திரும்பி பார்க்க மாட்டேன் என சுப்பரிமணி கூறியதை கோரி முகமது நம்பியுள்ளார்.

பின்னர் கோரி முகமது, சுப்பிரமணி, பாண்டியராஜன் ஆகியோர் அங்குள்ள ஆள் நடமாட்டம் அற்ற ஒரு தோட்டத்துக்கு சென்று மது அருந்தியுள்ளனர். இந்த சம்பவத்தை வசமாக பயன்படுத்திக் கொண்ட சுப்பிரமணியும், பாண்டியராஜனும் கோரி முகமதுவுக்கு அதிக அளவு மது கொடுத்து மயக்கமடைய செய்துள்ளனர்.

பின்னர் கோரிமுகமதுவை கீழே தள்ளி அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு சுப்பிரமணியும், பாண்டியராஜும் தப்பி ஓடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த கோரி முகமது துடி துடித்துப் போனார். பின்னர் அவர் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். 

இது குறித்து வருஷநாடு போலீசார் வழக்குபதிவு செய்து பாண்டியராஜை கைது செய்தனர். தலைமறைவான சுப்பிரமணி என்பவரை தேடி வருகின்றனர்.

கணவனே கண்கண்ட தெய்வம் என்று சொல்வது போய் கள்ளக்காதலை கண்டிக்காமல் இருப்பவனே கடவுள் என்ற நிலை வந்துவிடுமோ என ஒழுக்கமாக வாழ நினைக்கும் சிலர் அஞ்சுகின்றனர்