மேற்கு வங்க மாநிலத்தில் 8 ஆண்டு காதலித்த பெண்ண்ணை கரம் பிடிக்க காதலன் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் பல்வேறு தரப்பினரையும் கவர்ந்துள்ளது.
8 வருட காதலை மறந்த காதலி! திருமண மண்டபத்தில் காதலன் செய்த தரமான சம்பவம்!

திருமணக் களை கட்டியிருந்த அந்த வீட்டின் முன் ஒரு இளைஞர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் அந்த ஊரில் பரபரப்பை ஏற்படுத்தியது. அது அரசியல் போராட்டம் அல்ல இளைஞரின் இதய வலியை உணர்த்தும் காதல் போராட்டம்
விஷயம் இது தான். இளைஞர் ஆனந்த பர்மனுக்கும் அவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண்ணான லிப்பிகாவுக்கும் காதல் அரும்பியது. 8 ஆண்டுகளாக இன்பமயமாகச் சென்றுகொண்டிருந்த அவர்களின் காதல் வாழ்வில் திடீர் தடங்கல் ஏற்பட்டது. பர்மனுடனான அனைத்து தொடர்புகளையும் லிப்பிகா துண்டித்துக்கொண்டார். சமூக வலைதளங்களில் கூட லிப்பிகாவை தொடர்பு கொள்ள முடியாமல் போனது.
இதையடுத்து லிப்பிகாவின் வீட்டுக்கு பர்மன் சென்றபோது அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து லிப்பிகாவின் வீட்டின் முன் அமர்ந்து பர்மன் போராட்டத்தில் ஈடுபட்டார். காதலை திரும்பக் கொடு. 8 ஆண்டுகளை திரும்பக் கொடு என்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பர்மனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
மணமகன் வீட்டாரும் லிப்பிகா வீட்டுக்கு வந்து விட்டனர். இந்நிலையில் பர்மனின் உடல் நிலை நாட்கள் செல்லச் செல்ல மோசமடைந்ததையடுத்து ஊர் பெரியவர்கள் லிப்பிகா குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பர்மனை திருமணம் செய்ய லிப்பிகாவும், அவரது குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர்.