டிக்-டாக் செயலியை இந்தியாவில் அதிகளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக தமிழர்கள் தான் இந்த செயலியை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
ஏரிக்குள் கழுத்தளவு தண்ணீரில் நின்று வீடியோ! டிக் டாக் மோகத்தால் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்! துடிக்கும் உறவுகள்!
தெலங்கானா மாநிலம் ஐதராபாதின் புறநகர் பகுதியில் உள்ள ஏரியில் நரசிம்மலு(24) தனது மைத்துனருடன் சேர்ந்து குளிக்கச் சென்றுள்ளார். பின்பு இருவரும் குளிக்கச் செல்லும் போது டிக்-டாக் வீடியோ ஒன்றை எடுத்துள்ளனர்.இந்நிலையில் நீச்சல் தெரியாத நரசிம்மலு தண்ணீரின் ஆழத்தில் மூழ்கினார்.
இதுபோக ஏரியில் குளிப்பதற்கு முன்னால் எடுக்கப்பட்ட டிக்-டாக் வீடியோ இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது. தண்ணீரில் மூழ்கி தவிக்கும் நரசிம்மலுவை கன்ட தனது மைத்துனன் அக்கம்பக்கத்தில் இருக்கும் அனைவரின் உதவியை நாடியுள்ளார்.ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே நரசிம்மலு தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்பு மீட்புக்குழுவினர் நீரில் மூழ்கிய அவரது உடலை மீட்டனர்.மேலும் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்றும் தெரியவந்தது.அவர்கள் குளிக்கும்போது எடுத்த டிக்-டாக் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.