மாவு அரைக்கும் கிரைண்டருக்குள் தவறி விழுந்த இளைஞர்! பிறகு நேர்ந்த விபரீதம்!

மணிலா: இளைஞர் ஒருவர் இறைச்சி அரைக்கும் கிரைண்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உலகம் முழுக்க கொத்துக்கறி தயாரிப்பதற்காக, தற்போது புதிய இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதனை சாசேஜ் தயாரிக்கும் நிறுவனங்கள் பலவும் பயன்படுத்துகின்றன. அதாவது, இந்த இயந்திரத்திற்குள் எவ்வளவு பெரிய இறைச்சியாக இருந்தாலும் உள்ளே போட்டால் போதும், அப்படியே சுக்கு சுக்கா கொத்துக் கறி போட்டு வெளியே தள்ளிவிடும். இந்த கிரைண்டரை பலர், கொலைகள் செய்யக்கூட பயன்படுத்துகிறார்கள்.

இந்த சூழலில்தான், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சாசேஜ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 18 வயது இளைஞர், எதிர்பாராவிதமாக, சாசேஜ் இயந்திரத்திற்குள் விழுந்து, பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து பற்றிய புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில், இளைஞர் ஒருவரின் தலை, இடுப்பு  பகுதி இயந்திரத்தில் சிக்கி சிதைந்து கிடக்கிறது.

சில மாதங்களுக்கு முன்புதான் குறிப்பிட்ட இளைஞர், அந்த கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ஜோமர் ஜங்கோ என்ற பெயருடைய அவர், உடன் பணிபுரியும் நபர் இன்றி தனியாளாக இயந்திரத்தை இயக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதே தகவலை, அவருடன் பணிபுரியும் சக பணியாளர் கார்ல் டேவிட் கர்லோஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 

அதேசமயம், அந்த கம்பெனியின் உரிமையாளர் ஜேசியலர் கூறுகையில், பாக்கெட் செய்யும் பிரிவில் பணிபுரிந்த ஜோமர், இயந்திரப் பிரிவுக்குச் சென்றது அதிர்ச்சியாக உள்ளதென்றும், இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த சம்பவம் பிலிப்பைன்ஸ் முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.