திருப்பதியில் நண்பர்களை கலாட்டா செய்வதற்காக வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்து தற்கொலைல் செய்து கொள்ளப் போவதாக விளையாட்டாகக் கூறிய இளைஞர் உண்மையிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
தூக்கு போட்டுக் கொண்டு வாட்ஸ் வீடியோ கால் மூலம் நேரலை! இளைஞனுக்கு ஏற்பட்ட கொடூரம்!

திருச்சானூரில் ஒரு வாகன விற்பனை மையத்தில் பணியாற்றிவந்தவர் சிவக்குமார். 25 வயது இளைஞரான இவர் நேற்று மது அருந்திவிட்டு முழுமையான போதையுடன் நிதானமிழந்த நிலையில் தன் நண்பர்கள் அனைவருக்கும் வாட்ஸ் அப் கால் செய்தார்.
வாட்ஸ் அப் காலில் அவர் மின்விசிறியில் துணி ஒன்றால் தனது கழுத்தில் சுருக்கிட்டபடி நாற்காலி ஒன்றின் மீது நின்ற காட்சியைக் கண்டு நண்பர்கள் முதலில் அதிர்ந்தாலும் பின்னர் அவரது சிரிப்பைக் கண்டு அவர் விளையாட்டுக்கு அதுபோல் நடந்துகொள்வதாக் கருதினர்
போதைக்கிடையே சிரிப்புடன் தான் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ளப் மிரட்டல் விடுத்த நிலையில் அதனை சற்று மெத்தனமாகவே எடுத்துக்கொண்ட நண்பர்கள் அவர் உண்மையிலேயே நாற்காலியை உதைத்துத் தள்ளியபோதுதான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்தனர்.
விளையாட்டை நிறுத்துமாறு அவர்கள் அனைவரும் வாட்ஸ் அப் அழைப்பிலேயே அலறிய போதும் அதனைக் கேட்கும்நிலைமையை அவர் கடந்திருந்தார். இதையடுத்து சிவக்குமாரின் பெற்றோருக்கு போன் செய்த நண்பர்கள் நிலைமையை விளக்க, பெற்றோர் பதற்றத்துடன் சிவக்குமாரின் அறைக்கு ஓடினர். ஆனால் அதற்கு முன் அவர் இறந்து போயிருந்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடிபோதையில் நிதானமிழந்த தன்மையும், விபரீத விளையாட்டும் ஒரு இளைஞனின் உயிரை பலி வாங்கியிருக்கிறது.