இரு ஆண்டுகளுக்கு முன் டிக் டாக் வீடியோவுக்காக இளைஞர் ஒருவர் செய்த முயற்சி தற்போது அவருக்கே வினையாகி உள்ளது.
பைக்கில் சாகசம் செய்து டிக் டாக் வீடியோ! இளைஞருக்கு பிறகு நேர்ந்த விபரீதம்!

மகாராஷ்டிரா மாநிலம் தாராவியை சேர்ந்த இளைஞன் அட்னான் ஷேக். இருசக்கர வாகன பந்தயத்தின் மீது ஆர்வம் கொண்ட அந்த இளைஞன் இரு ஆண்டுகளுக்கு முன்னர் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துக்கொண்டார். இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று சாகசம் செய்யும் வகையில் அந்த வீடியோக்கள் இருந்தன. அந்த வீடியோக்கள் தற்போது டிக் டாக் செயலியில் வேகமாகப் பரவின. 88 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.
வாட்ஸ் அப்பிலும் இது வேகமாக பரவவே போலீசாரின் கண்களில் பட்டது. போக்குவரத்து விதிகளை மீறிய அந்த இளைஞரின் செயல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஷேக்கை தேடிய போலீசார் அவரது இருப்பிடத்தை கண்டறிந்து கைது செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் செய்த சாகசத்துக்காக இப்போது கைது செய்வதா என்று அந்த இளைஞர் புலம்பியுள்ளார்.
இந்த வீடியோக்கள் வேகமாகப் பரவக் காரணம் ஒரு செய்தியாளர் தான் என்று கூறப்படுகிறது. அட்னான் ஷேக் தனக்கு பேட்டி கொடுக்காமல் மற்றொரு செய்தியாளருக்கு பேட்டி கொடுத்த காரணத்தால் வீடியோக்களை பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.