இரவில் சாலையோரம் படுத்து உறங்கிய பெண்! பக்கத்தில் சென்று படுத்துக் கொண்ட இளைஞன்! பிறகு அரங்கேறிய விபரீதம்! கன்னியாகுமரி சம்பவம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலையோர பெண் வியாபாரியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.


பாறசாலை உதியன் குளக்கரை பகுதியில் சாலையோரத்தில் பொம்மை கடை வைத்து ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது அன்றாட வாழ்க்கையை ஓட்டி வருகிறார். தினமும் அந்த வழியே செல்லும் ரஞ்சன் என்பவர் அந்தப் பெண் தனியாக வியாபாரம் செய்து வருவதை கவனித்தார். இதனால் அந்த பெண் மீது இளைஞருக்கு சபலம் ஏற்பட்டது. 

இந்நிலையில் சாலையோரத்தில் நேற்று இரவு கூடாரத்தில் அந்த பெண் தூங்கிக் கொண்டிருக்கும்போது ரஞ்சன் அமைதியாக சென்று அவர்கள் அருகில் படுத்துக்கொண்டார். பின்னர் அந்தப் பெண் வாயை பொத்தி இருட்டான பகுதிக்கு தூக்கிக் சென்ற நிரஞ்சன் அங்கு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

உடனே அலறி அடித்த பெண் ரஞ்சன் கையை கடித்து கூச்சலிட்டார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் ரஞ்சனை பிடித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். இதையடுத்து ரஞ்சனை 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ரஞ்சன் சிறையில் அடைக்கப்பட்டார்.

வறுமை காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வந்து சாலையோரம் கூடாரம் அமைத்து, மழை, வெயிலில் அவதிப்பட்டுக் கொண்டு அன்றாட பிழைப்பை ஓட்டி வந்த பெண்ணுக்கு நேர்ந்த அசம்பாவிதம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.