சுடிதார் துப்பட்டாவில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்த இளம் காதலர்கள்! பிறகு நேர்ந்த பரிதாபம்!

திட்டக்குடி அருகே தங்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இளம்காதல் ஜோடி விவசாய கிணற்றில் விழுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூர் கிராமத்தை சேர்ந்த வேந்தன் என்பவரின் விவசாய கிணறு உள்ளது. அதில் எப்போதும் போல் தண்ணீர் திறந்து விடுவதற்காக வேந்தன் மோட்டாரை இயக்குவதற்காக அப்பகுதிக்கு சென்று உள்ளார். போது திடீரென கிணற்றின் உள்ளே ஏதோ மிதப்பது போல் தெரிகிறது என்று எட்டிப் பார்த்த வேந்தன் கிணற்றினுள் இரு சடலங்கள் மிதப்பதை பார்த்து அதிர்ந்தார். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி தீயணைப்புத்துறை அதிகாரிகள் சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த சிவரஞ்சன் மற்றும் கீழக்கல்பூண்டி கிராமத்தை சேர்ந்த அபிராமி என்பது தெரியவந்தது.

உடனே அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த இருவரின் பெற்றோர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்ததாகவும் இவர்களின் காதலுக்கு பெற்றோரின் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த இருவரும் இன்று காலை கிணற்றில் விழுந்து தற்கொலை  செய்து கொண்டுள்ளனர். பின்னர் அவர்களின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 16 வயதில் என்ன காதல் 18 வயதில் ஏன் தற்கொலை என்று இருவரின் பெற்றோரும் கதறியது காண்போரை அதிர வைப்பதாக இருந்தது.