கணவனுக்கு 2வது திருமணம்! 22 வயது இளம் பெண் மர்ம மரணம்! தருமபுரி பரபரப்பு!

தர்மபுரி அருகில் குடும்ப தகராறில் இளம் பெண் மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே கடக்கார அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் கூலித்தொழிலாளியின் மகள் ஜெயபிரியா (வயது 22) 

கிருஷ்ணகிரி காவேரிபட்டணம் சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து ஒரு வயது குழந்தை உள்ளது.ஜெயபிரியா திருமணத்தின் போது 10 பவுன் நகை அணிந்து வந்துள்ளார்.

சிலம்பரசன் குடும்பத்தினர் அந்த நகைகளை அடகு வைத்துள்ளதால், அடிக்கடி இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், நேற்று மாலை 6 மணி அளவில் ஜெயபிரியா தனது தந்தையான முருகனுக்கு போன் செய்து தனது மாமியார் வீட்டில் நகைக்காக பிரச்சினை செய்வதாக அழுது இருக்கிறார்.

மேலும் கணவனுக்கு 2வது திருமணம் செய்யப்போவதாக மாமியார் கூறியுள்ளார். இதனை அடுத்து, இரவு 8.30 மணியளவில் ஜெயபிரியா இறந்து விட்டதாக தகவல் அறிந்து அதிர்ந்து போனார்.

இந்த நிலையில் மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்ததன் பேரில் விசாரணை நடத்திவருகின்றனர். திருமணமாகி, 2 வருடங்களே ஆன நிலையில் இளம் பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.