என்னால் சீமானிடம் சேர்ந்தவர்கள் என்னை மன்னியுங்கள்! இளம் பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒரு பெண் ஒருவர், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்தில் உடன்பாடு இல்லை என்றும், மேலும் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.


நாம் தமிழர் கட்சி. நாங்குநேரி இடைத்தேர்தலில், 749 வாக்குகள் கூடுதலாக பெற்று ஹரி நாடார் பெற்றார். அதனால், அத்தொகுதியில் தோல்வியை தழுவியது நாம் தமிழர் கட்சி. இந்த தொல்வியினால் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது. 

இந்த நிலையில், சீமானின் கட்சியில் பிரசாரம் செய்த கல்பனா என்ற இளம்பெண் தற்போது சீமானின் கட்சியிலிருந்து விலகி உள்ளார். இதைப் பற்றி கல்பனா கூறும் போது, நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளும் சீமான் நடந்து கொள்ளும் விதமும் முரண்பாடாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் ஈழம் குறித்த நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மிகவும் பிடித்ததால் நாம் தமிழர் கட்சியில் இணைந்து பணியாற்றியுள்ளார். ஆனால் தற்போது சீமான் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலையை நியாயப்படுத்தி பேசியதோடு, அதை நாங்கள் தான் செய்தோம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். சீமானின் இந்த கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை அதனால் அக்கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாகவும், இடைத்தேர்தலில் பிரசாரத்தை கேட்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளித்திருந்தால் என்னை மன்னிக்கவும் என்றும் தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார் அந்த இளம்பெண் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவினால் அக்கட்சியின் உறுப்பினர்கள் சோகத்தில் உள்ளார்கள்.