நினைத்த போதெல்லாம் உல்லாசம்! ஆனால் காதலன் இப்படி செய்துவிட்டானே? இளம் பெண் என்ஜினியர் எடுத்த விபரீத முடிவு!

திண்டுக்கல் கலெக்டர் வீட்டின் முன்பு பெற்றோர்களுடன் ஒரு பெண் தனது காதலனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.


திண்டுக்கல்லில் பேருந்து நிலையம் அருகே உள்ள கலெக்டர் இல்லத்தில் இளம்பெண் ஒருவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இந்நிலையில் அப்பெண்ற்கு இதற்கு ஆதரவாக அவரது பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடனே அங்கே கூட்டம் கூடிய நிலையில்   ஆட்சியர், அவர்களுக்கு என்ன பிரச்சனை என விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து காவல்துறையினர் அவர்களை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அப்பெண் திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த திவ்யா ரோசலின் 24. மற்றும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்துள்ளார்.

இதையடுத்து அவருக்கும் அதே கல்லூரியில் சேர்ந்த அருண்ஜோஸ் பிரான்சிஸ் என்பவரும் முதலில் நண்பர்களாக பழகி வந்தனர். பின்னர் அவருடன் நட்பாக பழகிய  நிலையில் அவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். 

இதையடுத்து இருவரும் தனிமையில் வெளியூர்களுக்கு சென்று வந்துள்ளனர்.பின்னர் அருண்ஜோஸ் வீட்டில் யாரும் இல்லாதபோது தன்னை தனிமையில் அழைத்து தன்னுடன் நெருக்கமாக இருந்துள்ளார். திருமணம் செய்து கொள்ள போவதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார் என அப்பெண் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கல்லூரி படிப்பை முடித்து விட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறிய அவர் தற்போது தன்னிடம் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்வதில்லை, போனில் தொடர்பு கொண்டு பேசினாலும் சரியாக பதில் அளிப்பதில்லை மற்றும் வெளி வட்டாரங்களில் தன்னை அவரது தங்கை என கூறியுள்ளார். இந்த சம்பவமானது தனது பெற்றோர்களுக்கு தெரிந்தால் அசிங்கம் என நினைத்து அப்பெண் பலமுறை அவரிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு.

 இதையடுத்து அருண் அதற்கு எந்த ஒரு பதிலும் தெரிவிக்காத நிலையில் ஆத்திரமடைந்த அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தான் தீக்குளிக்க முயற்சி செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் புகாரை பழனி மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கும்படி திருப்பி அனுப்பினார்.

பின்னர் அங்கு சென்று புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் நிலவியது பின்னர் மாவட்ட ஆட்சியர் வந்து இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய கூறிய பின்னரே அவர்கள் மூவரும் அந்த இடத்தைவிட்டு சென்றனர். மேலும் அருண் என்பவரை அழைத்து விசாரணை மேற்கொள்ளும்படி காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.