காது கேட்காத, வாய் பேசாத தாயின் முன்னிலையில் அவர் மகளை கதற கதற..! தொழில் அதிபர் அரங்கேற்றிய வக்கிரம்!

பாலியல் பலாத்காரம் செய்த தொழிலதிபர் மீது கொடுத்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி சிறுமி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.


உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெண் ஒருவர் எரித்து கொன்ற சம்பவம் அடங்குவதற்குள் அடுத்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. லக்னோவில் கடந்த சனிக்கிழமையன்று தந்தை வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் காது கேட்காத, வாய் பேசமுடியாத தாயுடன் சிறுமி வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தொழிலதிபரும் 3 குழந்தைகளுக்கு தந்தையுமான சர்வேஷ் ராவத் என்பவர் சிறுமி வீட்டிற்கு வந்துள்ளார். இதைப் பார்த்த சிறுமியின் தாய் வந்து தடுத்தபோது அவரை கடுமையாக தாக்கிவிட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டி உள்ளார்.

மகளுக்கு நேர்ந்த கொடுமையை போலீசாரிடம் தெரிவித்துள்ளார் அவரது தந்தை. ஆனால் போலீசார் தொழிலதிபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. மகளுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற சோகத்தோடு வீட்டிற்கு சிறுமியின் தந்தை வந்துள்ளார். இதை பார்த்த அந்த சிறுமி உடனடியாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஷயம் ஊர் முழுவதும் தெரிந்துவிட போலீசார் தொழிலதிபர் சர்வேஷ் மிது போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகார் கொடுக்கும்போதே போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமிக்கு இந்த கதி ஏற்பட்டிருக்காது என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.