கிருஷ்ணகிரி அருகில் இளம்பெண்ணை அடித்து தகாத வார்த்தையால் திட்டிய தோழியின் கணவர், மன உளைச்சலில் தற்கொலை கொண்டதால் பரபரப்பு..
மனைவியின் தோழியிடம் வரம்பு மீறிய கணவன்! பிறகு நேர்ந்த பரிதாபமும் விபரீதமும்!
கிருஷ்ணகிரி அருகில், நலகொண்டலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது33) விவசாயியம் பார்த்து வருகிறார், இவரது மனைவி ராதா(வயது 27) இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஜுன் மாதம் 23-ம் தேதி தகராறு முற்றியது அதில் கணவர் ராதாவை தாக்க ஆவேசமாக துரத்தி சென்றுள்ளார்.
பயந்து போன ராதா உயிருக்கு பயந்து அருகில் இருந்த காயத்ரி (தோழி) வீட்டுக்குள் சென்று மறைந்து கொண்டார். அப்போது ராதாவை தேடி வந்த கணவர் காயத்ரியிடம் கேட்க , காயத்ரி முன்னுக்கு பின்னாக பதில் சொல்லியதில் சந்தேகமடைந்து அவரை தள்ளிவிட்டு வீட்டின் உள்ளே புகுந்து ராதா வை அடித்து இழுத்து வந்ததுடன், காயத்ரியை அறைந்து விட்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்
இதனால் மனமுடைந்த காயத்ரி தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து மகாராஜ கடை போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதன் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர், இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் தொடர்ந்தனர்.
இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, மனைவியின் தோழியை தற்கொலைக்கு தூண்டிய காரணத்திற்காக சங்கருக்கு 5 ஆண்டுகளும், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தாக்கி, அசிங்கமான வார்த்தையால் திட்டியதற்கு 2 ஆண்டுகளும் என 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.6ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது உள்ளார்.
சாதாரண குடும்பத் தகராறு சிறை தண்டனை வரை இட்டு சென்றதில் இரு குடும்பமும் பாதிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.