ஆண் நண்பன் முன்பாக, இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனிமையில் ஆண் நண்பருடன் இருந்த பெண்! சுற்றி வளைத்து 6 பேர் அரங்கேற்றிய கொடூரம்!

கர்நாடகா மாநிலம், மைசூர் மாவட்டத்தில் உள்ள லிங்காபுர கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு, ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணை சுற்றி வளைத்த, 6 காமக் கொடூரர்கள், தொல்லை செய்துள்ளனர். இதனை தட்டிக் கேட்ட, ஆண் நண்பரை கல்லால் தாக்கியுள்ளனர்.
இதில், அந்த நபர் மயக்கமடைந்துவிட, பின்னர், அப்பெண்ணை கதற கதற பலாத்காரம் செய்துவிட்டு, தப்பியோடிவிட்டனர். குறிப்பிட்ட ஆண் நண்பருக்கு, வலது கால் எலும்பு முறிந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி தகவல் கிடைத்ததும், ஜெயபுரா போலீஸ் எஸ்பி அமித் குமார் சிங் உடனே சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இதுபற்றி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட அவர், குற்றவாளிகளை கைது செய்ய 8 பேர் அடங்கிய தனிப்படை ஒன்றை அமைத்தும் உத்தரவிட்டுள்ளார்.