நண்பனின் சகோதரியுடன் கட்டாய செக்ஸ் உறவு! ஆபாச படம்! இளைஞர் அரங்கேற்றிய விபரீதம்!

இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர் அதனைக் காட்டி மிரட்டியே அந்தப் பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.


பாதிக்கப்பட்ட பெண், குற்றவாளி இருவருமே உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரை சேர்ந்தவர்கள். இந்நிலையில் அந்தப் பெண்ணும் அவரது சகோதரரும் கடந்த ஆண்டு மும்பைக்கு இடம் பெயர்ந்த நிலையில் அந்தப் பெண்ணின் சகோதரனுடன் அந்த நபர் நண்பனாக பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் அந்தப் பெண்ணின் தொலைபேசி எண்ணைப் பெற அந்த நபருக்கு எளிதாக இருந்தது. அதன் மூலம் அந்தப் பெண்ணுடன் பேசி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அந்த நபர் ஒருமுறை நேரில் பேச பண்ட்ஸ்டாண்ட் என்ற இடத்துக்கு நேரில் அழைத்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வந்த அந்த்ப பெண்ணை தனியான இடத்துக்கு அழைத்துச் சென்ற அந்த நபர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதனை தன் நண்பன் மூலம் வீடியோ எடுக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோவை காட்டியே அந்த நபர் கடந்த ஆண்டு ஜூன் முதல் கடந்த ஜனவரி வரை தன்னை 7 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அண்மையில் அந்த நபர் மீண்டும் தன்னை தொடர்பு கொள்ள முயன்றதையடுத்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன்பேரில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான அந்த நபரையும் வீடியோ எடுத்த அவனது நண்பனையும் தேடி வருகின்றனர்.