திடீரென தகாத உறவை துண்டித்த காதலி! வீடு புகுந்து கள்ளக் காதலன் செய்த கொடூரம்!

திருமணமான இளம் பெண் பழைய காதலை தொடர மறுத்ததால் அவரை சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்ற முன்னாள் காதலன் தானும் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


டெல்லியின் சிராக் டில்லியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் பிங்கி். இவருக்கு 5 ஆண்டுகளுக்கு  முன் திருமணம் நடைபெற்ற நிலையில் மெக்கானிக்கான தனது கணவனுடனும் 4 வயது மகனுடனும் வசித்து வருகிறார். பிங்கி ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் பிங்கி தனது திருமணத்துக்கு முன் காதலித்த சன்னி என்ற நபர் பிங்கியை அவ்வப்பது சந்தித்து தன்னுடனான உறவை தொடர வலியுறுத்தி வந்ததாகவும் அதற்கு பிங்கி மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து பிங்கி தனது காதலனுடன் பழகி வந்துள்ளார். இது கணவனுக்கு தெரியவரவே உறவை துண்டித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிங்கி தனது வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற சன்னி தன்னுடனான காதலை தொடர வலியுறுத்தியதாகவும் அப்போதும் பிங்கி மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சன்னி, பிங்கியை சரமாரியாக கத்தியால் குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். 

தகவல் அறிந்து வந்த போலீசார் அங்கு பிங்கியுடன் சன்னியும் கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் கிடந்ததாகத் தெரிவித்தனர். ஆனால் பிங்கியை ஆத்திரத்துடன் தாக்கும் போது சன்னிக்கு காயம் ஏற்பட்டதா அல்லது கைக்கலப்பால் ஏற்பட்டதா என விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பிங்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சன்னிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.